Share on Social Media


ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)

”காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் என ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. அண்ணா பொதுத்தள அரசியலை மேற்கொண்டார். கருணாநிதி முதல்வரான பிறகு, தனக்கென ஒரு பாணியைக் கடைபிடித்தார். பட்டியல் சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டு 16-லிருந்து 18 ஆக அதிகரித்தார். சட்டநாதன் கமிஷன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையும் 25-லிருந்து 31-ஆக அதிகரித்தார். கருணாநிதி வெற்றிபெற்று வந்தால், ஐந்து வருடம் முழுமையாக ஆட்சி இருந்தால் போதும் என நினைப்பார். ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்தார்கள் நமக்காக வாக்களிக்கவில்லை என வாக்களித்த மக்களையே பிரித்துப் பார்க்கும் மனநிலை அவருக்கு இருந்தது. ஆனால், ஸ்டாலின், வாக்களித்த மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும், 2026-ம் ஆண்டிலும் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறார். மந்திரி சபையிலும் அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என நினைக்கிறார்.

ரவீந்திரன் துரைசாமி

ரவீந்திரன் துரைசாமி

கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா எனும் மாபெரும் தலைவர் இருந்தார். ஆனால், ஸ்டாலினுக்கு எதிராக மிகப்பெரிய தலைவர்கள் யாரும் இல்லை. இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இரட்டைத் தலைமையாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களை தனக்கு இணையானவர்களாக ஸ்டாலின் நினைக்கவில்லை. தி.மு.க Vs அ.தி.மு.க என என்பதற்குப் பதிலாக, ஸ்டாலின் Vs மற்றவர்கள் என அரசியல் களத்தை கட்டமைக்க நினைக்கிறார். கருணாநிதியிடம் இருந்து ஸ்டாலினின் அணுகுமுறையில் மாற்றங்கள் தெரிகின்றன. ஸ்டாலினின் பாணி, 1954-57 காமாராஜர் பாணியைப் போல் தெரிகிறது. தேர்தல் வெற்றியிலும், உள்கட்சி அரசியல் வெற்றியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் ஸ்டாலின் கருணாநிதியைவிட ஒருபடி மேலேதான் இருக்கிறார்.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *