Share on Social Media


பெங்களூரு-”முதல்வர் பதவியிலிருந்து, எடியூரப்பா கீழே இறக்கப்படுவார் என, ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் அதை யாரும் நம்பவில்லை. இப்போது அதற்கான காலம் வந்துள்ளது,” என, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து கீழே இறங்குவதால், காங்கிரசுக்கு லாபமா, நஷ்டமா என்பது முக்கியமல்ல.ஒரு ஊழல் முதல்வர், பதவியிலிருந்து செல்ல வேண்டும். முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஊழலில் மூழ்கியுள்ளார்.எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து மாற்றப்படுவார் என்பது எனக்கு தெரியும். இதை, நான் ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் யாரும் அதை நம்பவில்லை. இப்போது அதற்கான காலம் வந்துள்ளது.எடியூரப்பாவை நீக்கினால், வேறொருவர் முதல்வராவார். ஆட்சி காலம் முடிவதற்குள் தேர்தல் நடக்கும் என, எனக்கு தோன்றவில்லை.என்னையும், மாநில காங்., தலைவர் சிவகுமாரையும், ராகுல் எதற்காக டில்லிக்கு அழைத்துள்ளார் என்பதை, இப்போதே கூற முடியுமா. அவர் அழைத்துள்ளார், நாங்கள் செல்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *