Share on Social Media


லட்சத்தீவு மக்களின் உரிமை குறித்து, நாம் குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசால் அவர்களின் குரல் நசுக்கப்படுகிறது.
– மத்திய முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா

‘முதலில் பீஹார், உ.பி., – ம.பி.,யில் உள்ள ஏழை மக்களுக்காக குரல் கொடுங்கள்; அதன்பின், எல்லை தாண்டி லட்சத்தீவுக்கு போகலாம்…’ என கூறத் தோன்றும் வகையில், பா.ஜ.,விலிருந்து வெளியேறியுள்ள மத்திய முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிக்கை.

தமிழகம் என்பதை தவிர்ப்போம்; தமிழ்நாடு என உரைப்போம். மத்திய அரசு என்பது பிழை; ஒன்றிய அரசு என்றே அழைக்க வேண்டும்.
– விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., ஆளூர் ஷா நவாஸ்

‘இத்தனை நாளும் எங்கே சென்றிருந்தீர்கள்; இப்போது திடீர் ஞானோதயம் வருகிறதே ஏன்…’ எனக் கேட்க தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., ஆளூர் ஷா நவாஸ் அறிக்கை.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை, மத்திய அரசு வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு, மத்திய – மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும்.
– த.மா.கா., தலைவர் வாசன்

‘நீங்கள் சொல்வதுபடி, மத்திய – மாநில அரசுகள் கேட்டால், பெட்ரோல், டீசல் விலை குறையத் தான் செய்யும்…’ என கூறத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.

கொள்கை ரீதியாக மோடியை எதிர்க்கட்சிகள் எதிர்க்கவில்லை; காழ்ப்புணர்ச்சியால் தான் எதிர்க்கின்றனர். திராவிடம், தமிழ் தேசியம், மாநில உரிமை என பேசுவோர் தான், மோடி எதிர்ப்புக்கு தீனி போடுகின்றனர்.
– தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

‘இவர்கள் இப்படி பிரிவினைவாதம் பேசிக் கொண்டே இருக்க வேண்டியது தான்; வேறு ஒன்றும் நடக்காது…’ என கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.

அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே கொரோனா நிதியுதவி என்ற திட்டத்தை ஒரு முறை மட்டும் திருத்தி, அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன்.
– விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

‘நீங்க கேட்ட அடுத்த நொடி, முதல்வர், ‘ஓகே’ சொல்லி விடுகிறார். இந்த கோரிக்கையும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது…’ என, கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.

கொரோனா முதல் அலை ஒன்றரை ஆண்டுகள் இருந்தது. இரண்டாவது அலை யை, முதல்வர் ஸ்டாலின் ஒன்றரை மாதத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.
– தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்

‘அப்போ, மூன்றாவது அலையை புறமுதுகு காட்டி ஓடச் செய்வார் முதல்வர் என்கிறீர்களா…’ என, ஆர்வமாக கேட்க தோன்றும் வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *