Share on Social Media


சிதம்பரம்:சிதம்பரத்தில் பல்வேறு தடைகளை கடந்து, நேற்று நடராஜர் கோவில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன், வடம் பிடித்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா, 21ம் தேதி துவங்கியது. நேற்று தேரோட்டம் நடந்தது. விழா துவங்கியதில் இருந்தே, மாவட்ட நிர்வாகம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ‘ஆன்லைன்’ மூலம் பதியும் பக்தர்களுக்கு மட்டுமே, தேர் மற்றும் தரிசன விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம், அறிவித்தது.

இதனால் கொதித்தெழுந்த தீட்சிதர்கள், பக்தர்கள், ஆன்லைன் பதிவு முறையை வாபஸ் பெறக் கூறி, மறியலில் ஈடுபட்டனர்.நள்ளிரவு வரை, அதிகாரிகள் பேச்சு நடத்தியும் முடிவு ஏற்பட வில்லை. தொடர்ந்து, உயரதிகாரிகள் ஆலோசனைக்கு பின், ‘ஆன்லைன் பதிவு தேவைஇல்லை’ என மாவட்ட நிர்வாகம், அதிகாலை அறிவித்தது.

இதையடுத்து, காலை, 6:00 மணிக்கு மேல் தீட்சிதர்கள், தேரோட்டம் நடத்த முடிவு செய்தனர். நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளை, 7:00 மணியளவில் தேரில் எழுந்தருள செய்தனர். இரண்டு மணி நேரம் தாமதமாக, 8:30 மணியளவில், தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.மாலையில், தேர் நிலையை வந்தடைந்தது. தேரில் இருந்து, சுவாமி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, இன்று அதிகாலை மகா அபிஷேகம், மாலை, 3:00 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *