Share on Social Media


புதுடில்லி: மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை குழுக்களும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

அதில், முக்கிய குழுவாக உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ் மற்றும் சர்பானந்த சோனவல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த குழுவில் ராஜ்நாத், அமித்ஷா, நிதின் கட்காரி, தோமர், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், கிரிராஜ் சிங், மனுசுக் மாண்ட்வியா, ஆகியோர் உள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தலைமையிலான பார்லிமென்ட் விவகாரங்களுக்கான குழுவில், வீரேந்திர குமார், கிரண் ரிஜ்ஜூ, அனுராக் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏற்னவே இந்த குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், தோமர், அர்ஜூன் முண்டா, பிரஹலாத் ஜோஷி, ஆகியோர் உள்ளனர். அர்ஜூன் ராம் மேவால், முரளிதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் இருக்கின்றனர்.

பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை குழுவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த குழுவில் பிரதமர் மோடி, ராஜ்நாத், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

latest tamil news

latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் மட்டும் இடம்பெற்றுள்ள நியமனத்திற்கான அமைச்சரவை குழுவிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை.
பிரதமர் தலைமையிலான முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவில் நாராயன் ரானே, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அஸ்வின் வைஸ்ணவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த குழுவில் ராஜ்நாத், அமித்ஷா, நிதின் கட்காரி, பியூஷ் கோயல் ஆகியோர் உள்ளனர்.

அதேபோல், பிரதமர் தலைமை வகிக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தனி நபர் பயிற்சிக்கான அமைச்சரவை குழுவில், அஸ்வினி வைஸ்ணவ், பூபேந்தர் யாதவ், ராமச்சந்திர பிரசாத் சிங் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *