Share on Social Media


பார்த்திபனின் நடவடிக்கை இன்ஸ்பெக்டர் போல் இல்லாமல் இருந்ததையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். அப்போது பார்த்திபன் தான் இன்ஸ்பெக்டர் இல்லை என்பதையும், தன் மனைவியான ஜனனியே டி.எஸ்.பி யாக ஆண் குரலில் பேசியதாகவும் கூறியிருக்கிறார். கணவன் மனைவி இருவரும் போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயன்றது தெரிய வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், சரவண பார்த்திபன் நண்பர்கள், ஜனனிக்கு போன் செய்து, “நீ ஏமாற்றி வாங்கிய ரூ.7 லட்சத்தை எடுத்துக் கொண்டு கும்பகோணம் வந்தால் தான் உன் கணவரை விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.

போலீஸ் போல் பேசி ஏமாற்றிய ஜனனி

போலீஸ் போல் பேசி ஏமாற்றிய ஜனனி

தான் ஏமாற்றியதை கண்டுபிடித்து விட்டார்கள் நாம் அங்கு சென்றால் சிக்கல் தான் என்பதை உணர்ந்த ஜனனி துாத்துக்குடி போலீஸில் புகார் அளித்து விட்டு, 30-ம் தேதி கும்பகோணம் வந்தார். தொடர்ந்து, கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில், கணவனை மீட்டு தர கோரி புகார் அளித்தார். அப்போது, போலீஸார் சரவண பார்த்திபன் அவரது நண்பர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில் ஜனனியும் அவரது கணவரும் சேர்ந்து போலீஸ் போல் பேசி ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றி சரவண பார்த்திபனிடம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, சரவண பார்த்திபன் கொடுத்த புகாரின் பெயரில், ஜனனி, அவரின் கணவர் பார்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், சினிமாவில் வருவது போல் தம்பதியினர் சேர்ந்து சரவண பார்ப்பனிடன் பணம் பறிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *