NTLRG 20201102104327005243 Tamil News Spot
Share on Social Media

முகத்தையும் மூட வைத்துவிட்டார்களே : ரைசா வருத்தம்

02 நவ, 2020 – 10:43 IST

எழுத்தின் அளவு:


Raizas-feeling

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தபின் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை மருத்துவ உலகம் சொல்லியது. அதில் முக்கியமான ஒன்று முகத்திற்கு முகக்கவசம் (மாஸ்க்) அணிவது.

மருத்துவமனைகளில் டாக்டர் மட்டுமே அணிந்து வந்த மாஸ்க்கை பொதுமக்களும் அணிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மெடிக்கல் மாஸ்க் தவிர்த்து பின்னர் விதவிதமான மாஸ்க்குகள் வர ஆரம்பித்துவிட்டன. பல கம்பெனிகள் மாஸ்க் தயாரிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டன. ஆடைகளுக்குத் தகுந்தபடி மாஸ்க்குகளை டிசைன் செய்து தரும் வேலைகளிலும் சில நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

இந்நிலையில் நடிகை ரைசா வில்சன் மாஸ்க் அணிவது பற்றிய ஒரு வருத்தத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். “மாடலிங்கில் முகத்தையும் சேர்த்து மறைப்போம் என துளியும் நினைத்துப் பார்த்ததில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மூட வேண்டியவற்றை சரியாக மூடாமல் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடும் சிலருக்கு ‘மாஸ்க்’ அணிந்து முகத்தை மூடுவது சலிப்பைத் தருகிறது போலும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *