Share on Social Media

புதுடில்லி: கொலை வழக்கில் தேடப்படும் சுஷில் குமார், மீரட் நகரில் காரில் சென்றது தெரியவந்துள்ளது.

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் 37. ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இரு பதக்கம் (2008ல் வெண்கலம், 2012ல் வெள்ளி) வென்ற ஒரே இந்திய நட்சத்திரம். முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியான இவர் மீது, ஜாமினில் வெளியே வர முடியாத ‘வாரன்ட்’ உள்ளது. 

இவர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 1 லட்சம் சன்மானம் தரப்படும் என டில்லி போலீசார் அறிவித்தனர். இது தொடர்பாக, சுஷில்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. 

இதனிடையே சுஷில் குமார் குறித்த ஒரு போட்டோ நேற்று வெளியானது. உ.பி.,ல் உள்ள மீரட், டோல் பிளாசாவை கடக்கும் காரில், அமர்ந்துள்ளார் சுஷில் குமார். கொலை நடந்த இரண்டாவது நாளில் (மே 6) இப்போட்டோ எடுக்கப்பட்டதாக டில்லி போலீசார் தெரிவித்தனர். காரை வைத்து சுஷில் குமார் இருக்கும் இடத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *