Share on Social Media


மீண்டும் ரீமேக்கை நம்பும் கண்ணன்

22 டிச, 2020 – 19:28 IST

எழுத்தின் அளவு:


Kannan-backs-to-Remake-movie

மணிரத்னத்தின் உதவியாளராக இருந்து ஜெயம்கொண்டான் படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் ஆர்.கண்ணன். அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஜப் வி மெட் இந்தி படத்தை கண்டேன் காதலை என்ற பெயரில் ரீமேக் செய்தார் அது வெற்றி பெற்றது. அதன் பிறகு டெல்லி பெல்லி இந்தி படத்தை சேட்ட என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படம் வெற்றிபெறவில்லை. அதன்பிறகு அவர் வந்தான் வென்றான், ஓரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன், பூமராங், பிஸ்கோத் படங்களை இயக்கினார்.

தற்போது மீண்டும் ரீமேக் படத்திற்கு வந்திருக்கிறார், 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற தெலுங்கு படம் நின்னு கோரி. ஷிவா நிர்வானா இயக்கி இருந்த இந்தப் படத்தில் நானி, நிவேதா தாமஸ், ஆதி, தணிகலபரணி உள்பட பலர் நடித்திருந்தார்கள். 18 கோடியில் எடுக்கப்பட்ட படம் 53 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படத்தை தள்ளிப்போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இதில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், நரேன், ஜெகன், அமிதேஷ் பர்தான் உள்பட பலர் நடிக்கிறார்கள், கோபி சுந்தர் இசை அமைக்கிறார், சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *