Tamil News 12 10 2020 19619166851044 Tamil News Spot
Share on Social Media

சென்னை : தங்கம் விலை இன்று காலை பவுனுக்கு ரூ.496 குறைந்தது. விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த மாதமும் இதே நிலை தான் நீடித்து வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு பவுன் ரூ.36,208, 2ம் தேதி ரூ.36,888, 3ம் தேதி ரூ.37,248, 4ம் தேதி ரூ.37,200, 5ம் தேதி ரூ.37,216க்கும் விற்கப்பட்டது. 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும்.7ம் தேதி பவுன் ரூ.37,088க்கும் விற்கப்பட்டது. 8ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிராமுக்கு ரூ.72 அதிகரித்து ஓரு கிராம் ரூ.4,708க்கும், பவுனுக்கு ரூ.576 அதிகரித்து ஒரு பவுன் ரூ.37,664க்கும் விற்கப்பட்டது.  தங்கம் விலை \”திடீரென\” அதிகரித்தது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்தது.

இந்த விலை உயர்வு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.24 குறைந்து ஒரு கிராம் ரூ.4,684க்கும், பவுனுக்கு ரூ.192 குறைந்து ஒரு பவுன் ரூ.37,472க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் தங்கம் விலை மேலும் குறைவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.4,622க்கும், பவுனுக்கு ரூ.496 குறைந்து ரூ.36,976-க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் பவுன் ரூ.37,000த்துக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *