Share on Social Media


கோல்கட்டா:’உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்து கட்சியில் மீண்டும் சேர்த்து கொள்ள வேண்டும். நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்துக்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த சோனாலி குஹா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்தார்.

இந்நிலையில் முன்னாள் சட்டசபை துணைத் தலைவரான அவர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதி அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: உணர்ச்சி வேகத்தில் தவறு செய்து பா.ஜ.வில் இணைந்தேன். என்னால் இங்கு இருக்க முடியவில்லை. அங்கு நான் தேவையில்லை என்பதை தெரிந்துகொண்டேன். தண்ணீரில்லாமல் மீன் எப்படி இருக்க முடியாதோ அதுபோல் நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னை மன்னித்து மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும், என கூறியுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *