Share on Social Media

சென்னை: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்திருக்கிறது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,521க்கும் சவரன் ரூ.36,168க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதும் என கண்ணாமூச்சி காட்டி வருகிறது. ஒருநாள் குறைவதும், மறுநாளே உயர்வதும் தங்கத்தின் வாடிக்கையாகும்.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,000 நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏழை, நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்குவது என்பது எட்டாக்கனியாக இருக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. தற்போது இரண்டாம் கட்ட பரவல் என்பது வெகுவாக குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தங்கத்திற்கான முதலீட்டு தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து  சவரன் ரூ.36,048க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73,90க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *