Share on Social Media


மீண்டும் உயிர் பெற்ற சிம்பு படம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

23 டிச, 2020 – 10:54 IST

எழுத்தின் அளவு:


Simbu---Gautham-project-confirmed,-first-look-releasing-tomorrow

கன்னடத்தில் நார்த்தன் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘முப்டி’. இப்படத்தை தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்க, கன்னடத்தில் படத்தை இயக்க நார்த்தன் இயக்கத்தில் மைசூரில் கடந்த வருடம் படப்பிடிப்பு ஆரம்பமானது.

சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வரவில்லை என்பதால் படப்பிடிப்பை நிறுத்தியதாகச் சொன்னார்கள். அதன்பின் பல பஞ்சாயத்துகள் நடந்து முடிந்தது. சில வாரங்களாக இப்படத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. முதலில் படத்தை இயக்கிய நார்த்தன் மாற்றப்பட்டு ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்க உள்ளார் என்றார்கள்.

சற்று முன் இப்படம் பற்றிய ஒரு அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் வெளியிட்டுள்ளது. நாளை 24ம் தேதி படத்தின் தலைப்பை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். அதோடு இந்த படத்தின் கேப்டன் ஆப் தி ஷிப், அதாவது இயக்குனர் கிருஷ்ணா என்பதையும் அறிவித்துள்ளார்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *