Share on Social Media

இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் கவாஸ்கர் சீரிஸுக்கு இந்திய அணி சென்றது. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடி இருந்தது இந்திய அணி. இதிலும், பிரித்வி ஷாவின் ஆட்டம் எடுபடவில்லை.

நியூசிலாந்து சீரிஸில் ஏமாற்றம், ஐபிஎல்-ல் சொதப்பல், பயிற்சி போட்டியில் திணறல் என முழுமையாக ஃபார்ம் அவுட் ஆகியிருந்தார் பிரித்வி. ஃபார்ம் அவுட் என்பதை தாண்டி, அவருடைய டெக்னிக்கில் அடிப்படையான சில விஷயங்களே மாற்றப்பட வேண்டியிருந்தது. இப்படி ஒரு நிலையில் இருக்கும் வீரர் மீது கோலி இயல்பாக எந்த நம்பிக்கையும் வைக்கமாட்டார். ஒரு போட்டி, ஒரு சீரிஸில் சொதப்பினாலே ஓரங்கட்டிவிடும் கோலி, பிரித்வி ஷா மீது மட்டும் ரிஸ்க் எடுத்து நம்பிக்கை வைத்தார். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் பிரித்வி ஷாவையே ஓப்பனராக இறக்கிவிட்டார்.

ஆனால், கோலி நம்பிக்கையை மொத்தமாக காலி செய்திருந்தார் பிரித்வி ஷா. “இப்படித்தான் அவுட் ஆவார் பாருங்கள்” என கமென்ட்ரி பாக்ஸில் ரிக்கி பான்ட்டிங் பேசிக்கொண்டிருக்க, அவர் பேசியதை போன்றே ஃபுட் ஒர்க் இல்லாமல் பேட்டுக்கும் பேடுக்கும் இடையேயான இடைவெளியில் பந்தை வாங்கி போல்டானார். இரண்டு இன்னிங்சிலும் அப்படியே அச்சு பிசகாமல் ஒரே மாதிரியே அவுட் ஆகியிருந்தார் பிரித்வி. இந்த போட்டியில் தான் இந்திய அணி 36 ரன்களுக்கு மோசமான முறையில் ஆல் அவுட் ஆனது.

கோலி இந்தியாவுக்கு கிளம்பிவிட, ரஹானே கைக்கு கேப்டன்சி போக அவர் ப்ரித்வி ஷாவை பென்ச்சில் வைத்தார். ரவி சாஸ்திரியையும் பிரித்வி ஷாவையும் வைத்து கேலியும் கிண்டலுமாக ட்ரோல்கள் பறந்தன. இங்கிலாந்துக்கு எதிரான ஹோம் சீரிஸில் டிராப் செய்யப்பட்டார் பிரித்வி.

அணியிலிருந்து விலக்கம், ஃபார்ம் அவுட், கிண்டல் கேலிகள் எல்லாம் சேர்ந்து பிரித்வி ஷா-வை பயங்கர மன உளைச்சலுக்குள் தள்ளியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இரண்டே மாதங்களில் மீண்டு வந்தார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *