Share on Social Media


பெங்களூரு : ஆபாச வீடியோ வெளியானதின் விளைவாக, அமைச்சர் பதவியை பறிகொடுத்த ரமேஷ் ஜார்கிஹோளி, மீண்டும் அமைச்சரவையில் இணைய முயற்சிக்கிறார்.

இது பலனளிக்காவிட்டால், ‘பிளான் – பி’ வைத்துள்ளார்.கர்நாடக பா.ஜ., அரசில், நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜார்கிஹோளி, 61. நடப்பாண்டு மார்ச்சில், அவரது ஆபாச வீடியோ வெளியாகி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.தர்மசங்கடத்தில் சிக்கி, சிறிது நாட்கள் பொது இடங்களில், தலை காண்பிக்காமல் ஒதுங்கியிருந்த ரமேஷ் ஜார்கிஹோளி, நாளடைவில் இயல்பு நிலைக்கு திரும்பினார்.மீண்டும் அமைச்சரவையில் சேரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தனக்கு நெருக்கமான, மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் மூலம், பா.ஜ., மேலிடத்தின் மனதை கரைக்க முயற்சிக்கிறார்.மடாதிபதிகள் உதவியால், மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்க முற்பட்டுள்ளார். அரபாவி எம்.எல்.ஏ.,வும், கே.எம்.எப்., தலைவருமான பாலசந்திர ஜார்கிஹோளியும், ஒரு வாரமாக டில்லி, மும்பை இடையே நடமாடி, தன் சகோதரர் ரமேஷ் ஜார்கிஹோளியை, அமைச்சரவையில் சேர்க்க அலைபாய்வதாக கூறப்படுகிறது.ஆபாச வீடியோ வெளிச்சத்துக்கு வந்து, நான்கு மாதங்களாகியும், இந்த வழக்குக்கு முற்றுப்புள்ளி விழவில்லை. வழக்கை முடிவுக்கு கொண்டு வராமல், சொந்த கட்சியினரே முட்டுக்கட்டை போடுவதாக, ரமேஷ் ஜார்கிஹோளி பொறுமுகிறார்.

வழக்கின் முடிவு தெரியாமல், அவரை அமைச்சரவையில் சேர்க்க, பா.ஜ., மேலிடம் தயங்குகிறது.ரமேஷ் ஜார்கிஹோளிக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால், முன்னெச்சரிக்கையாக, ஜார்கிஹோளி சகோதரர்கள், ‘பிளான்–பி’ வகுத்துள்ளனர். ரமேஷ் ஜார்கிஹோளியை, அமைச்சரவையில் சேர்க்க கட்சி மேலிடம் மறுத்தால், பாலசந்திர ஜார்கிஹோளியை, அமைச்சரவையில் சேர்க்க செய்ய வேண்டும். அவரிடமுள்ள கே.எம்.எப்., தலைவர் பொறுப்பை, ரமேஷ் ஜார்கிஹோளி ஏற்க திட்டமிட்டுள்ளார்.

பாலசந்திர ஜார்கிஹோளி, ரமேஷ் ஜார்கிஹோளியின் மகன் அமர்நாத், கே.எம்.எப்., இயக்குனர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜினாமா செய்து, ரமேஷ் ஜார்கிஹோளி இயக்குனராக, தலைவராக்கப்படுவார்.கே.எம்.எப்., லாபகரமான கூட்டுறவு சங்கமாகும். தங்கள் குடும்பத்தின் பிடியிலிருந்து, அது கை நழுவக்கூடாது என்பதே, ஜார்கிஹோளி சகோதரர்களின், ‘பிளான் -பி’ யின் நோக்கமாகும்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *