Share on Social Media

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,615-க்கும், சவரன் ரூ.36,920க்கும் விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் ரூ.36,680க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,585க்கு விற்பனையானது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த வருடம் தொடக்கம் முதலே தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ஒருநாள் விலை சரிவதும், மறுநாளே ஏறுமுகத்தை சந்திப்பதும் தங்கத்தின் வேலையாக இருந்தது. தங்கம் வாங்கவே வேண்டாம் என்ற மனநிலைக்கு அதன் விலை உயர்வு காணப்பட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். 

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. கடந்த மாதங்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.240 உயர்ந்திருப்பது  நகை பிரியர்களை வேதனையடைய செய்துள்ளது.  

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *