இதழ்கள் மற்றும் கொடிகள் ஏழு கண்டங்களின் சமூகங்களைக் குறிக்கின்றன. இந்த கிரீடம் இயற்கை, வலிமை, அழகு, பெண்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
70வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இஸ்ரேலில் நடந்தது. மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்தையும் கிரீடத்தையும் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து வென்றார். ஹர்னாஸ் தனது 21வது வயதில் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார். 21 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவுக்கு கிரீடம் வென்று பெருமை சேர்த்துள்ளார் இவர். இந்தப் பட்டம் இந்தியாவுக்கு வருவது இது மூன்றாவது முறையாகும்.

இதற்கு முன் இந்திய நடிகை சுஷ்மிதா சென் ‘மிஸ் யுனிவர்ஸ்-1994’ போட்டியில் அழகிப்பட்டம் வென்றார். பின் 2000 ஆம் ஆண்டில் இந்திய நடிகை லாரா தத்தா ‘மிஸ் யுனிவர்ஸ்-2000’ போட்டியில் அழகிப்பட்டம் வென்றார்.
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்துடன் அழகிக்கு அணிவிக்கப்படும் கிரீடத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? அப்படி என்ன விசேஷம் அந்த கிரீடத்தில்?
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
தற்போது ஹர்னாஸ் சாந்துவின் கிரீடம் இதற்கு முன் வென்ற சுஷ்மிதா சென் மற்றும் லாரா தத்தா அணிந்த கிரீடத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் அதன் வரலாற்றில் பலமுறை மாற்றப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு, கிரீடத்தை வடிவமைக்க ‘மௌவாட்’ எனும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது. மௌவாட் வடிவமைப்பாளர்கள் பின்னர் ‘மௌவாட் பவர் ஆஃப் யூனிட்டி கிரவுன்’ ஐ உருவாக்கினர்.
கிரீடத்தின் விலை:
தற்போது ஹர்னாஸ் சாந்து வென்றுள்ள கிரீடத்தின் விலை 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், இது இந்திய மதிப்பில் ரூ.37 கோடிக்கும் அதிகம். இதன்மூலம் உலகின் மிக விலையுயர்ந்த கிரீடத்தை வென்றவர் என்ற பெருமையும் ஹர்னாஸுக்குக் கிடைத்துள்ளது.

இந்த கிரீடம் 18 காரட் தங்கத்தால் ஆனது. இதில் சுமார் 1,725 வைரங்கள், 62.83 காரட் எடையுள்ள மையப்பகுதியில் கவசம் வெட்டப்பட்ட ‘கோல்டன் கேனரி’ வைரம் போன்றவை பதிக்கப்பட்டுள்ளன. கிரீடத்தில் பின்னப்பட்ட இலைகள், இதழ்கள் மற்றும் கொடிகள் ஏழு கண்டங்களின் சமூகங்களைக் குறிக்கின்றன. இந்த கிரீடம் இயற்கை, வலிமை, அழகு, பெண்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
Follow @ Google News: பக்கத்தில் இணையதளத்தை செய்து ஃபாலோ செய்யுங்கள்… உடனுக்குடன் பெறுங்கள்.
மிஸ் யுனிவர்ஸுக்கு வழங்கப்படும் வசதிகள்:
மிஸ் யுனிவர்ஸ் அழகிக்கான பரிசுத் தொகையை இதுவரை அந்த அமைப்பு வெளிப்படையாக அறிவித்தது கிடையாது. ஆனால் பரிசுத் தொகை பல லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மிஸ் யுனிவர்ஸ் நியூயார்க்கில் உள்ள மிஸ் யுனிவர்ஸ் குடியிருப்பில் ஒரு வருடம் தங்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஒரு வருடத்தில் உலக அழகிக்குத் தேவையான மளிகை சாமான்கள் மற்றும் போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன.

மேலும் ஒப்பனை, சிகை பொருள்கள், காலணிகள், உடைகள், நகைகள், தோல் பராமரிப்பு என அனைத்தும் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. சிறந்த புகைப்படக் கலைஞர்களைக் கொண்டு வெற்றியாளருக்கு மாடலிங்கில் வாய்ப்பு அளிக்கும் வகையில் போர்ட்ஃபோலியோக்களை உருவாக்குகிறார்கள்.
பிரத்யேக நிகழ்வுகள், பார்ட்டிகள், பிரீமியர்ஸ், ஸ்கிரீனிங், காஸ்டிங் ஆகியவற்றிலும் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பயணச் சலுகை மற்றும் ஹோட்டல் தங்குமிடத்திற்கும் கட்டணம் செலுத்தப்படுகிறது. வெற்றியாளருக்கு உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மிஸ் யுனிவர்ஸ் சார்பாக இந்த ஆடம்பரங்கள் அனைத்தையும் பெறுகிறார் ஹர்னாஸ் சாந்து. ஆனால் அவருக்கு மேலும் சில பெரிய பொறுப்புகளும் கொடுக்கப்படுகின்றன. மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் தலைமை தூதராக அவர் நியமிக்கப்பட்டு நிகழ்வுகள், விருந்துகள், செய்தியாளர் சந்திப்பு என அனைத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.