Share on Social Media

புதுடில்லி: இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங் 91. ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்பட்ட இவர், 1958 காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றார். ரோம் (1960) ஒலிம்பிக்கில் 400 மீ., ஓட்டத்தில் பைனல் வரை சென்று 4வது இடம் பிடித்தார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இவருக்கு, ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் கடந்த ஜூன் 18ல் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி, தடகள வீராங்கனை பி.டி. உஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மில்கா சிங்கின் மறைவுக்கு இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குர்பிரீத் சிங் கூறுகையில், ‘‘கடந்த 2015ல் சண்டிகரில் மில்கா சிங்கை சந்தித்த போது, ‘கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை. நான் பயிற்சிக்கு பின் சில நேரங்களில் ரத்த வாந்தி எடுப்பேன். ஆனால் எனது பயிற்சியை நிறுத்த மாட்டேன். நீங்களும் கடின உழைப்பை நிறுத்த வேண்டாம்’, என கூறினார். இவரது ஆலோசனை வெளிநாடுகளில் விளையாடச் சென்ற போது உதவியது,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *