Share on Social Media

மொகாலி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மில்கா சிங் நலமுடன் இருப்பதாக அவரது மகன் ஜீவ் மில்கா சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய தடகள ‘ஜாம்பவான்’ மில்கா சிங் 89. ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்படும் இவர், 1958ல் இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றார். ரோமில், 1960ல் நடந்த ஒலிம்பிக்கில் 400 மீ., ஓட்டத்தில் பைனல் வரை சென்று 4வது இடம் பிடித்திருந்தார்.

சமீபத்தில் மில்கா சிங்கிற்கு கொரோனா உறுதியானதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் மில்கா சிங்கின் உடலில் ‘ஆக்சிஜன்’ அளவு குறைந்ததால் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மில்கா சிங்கின் மகன் கோல்ப் வீரர் ஜீவ் மில்கா சிங் கூறுகையில், ‘‘மில்கா சிங் தற்போது நலமுடன் இருக்கிறார். சிகிச்சைக்கு அவரது உடல் நன்றாக ஒத்துழைக்கிறது,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *