Share on Social Media

மொகாலி: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மில்கா சிங்கின் உடல்நிலையில் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தடகள ‘ஜாம்பவான்’ மில்கா சிங் 89. ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்படும் இவர், 1958ல் இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றார். ரோமில், 1960ல் நடந்த ஒலிம்பிக்கில் 400 மீ., ஓட்டத்தில் பைனல் வரை சென்று 4வது இடம் பிடித்திருந்தார்.

சமீபத்தில் ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்ட மில்கா சிங் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதிலிருந்து தேறிய இவர், சமீபத்தில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். நான்கு நாட்களுக்கு பின், மில்கா சிங்கில் உடலில் ‘ஆக்சிஜன்’ அளவு குறைந்ததால் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘மில்கா சிங்கின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.

‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மில்கா சிங்கின் மனைவியும், இந்திய பெண்கள் வாலிபால் அணியின் முன்னாள் கேப்டனுமான நிர்மல் கவுர், நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *