Share on Social Media

மொகாலி: மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மில்கா சிங்கிடம், பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

இந்திய தடகள ‘ஜாம்பவான்’ மில்கா சிங் 89. ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்படும் இவர், 1958ல் இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றார். ரோமில், 1960ல் நடந்த ஒலிம்பிக்கில் 400 மீ., ஓட்டத்தில் பைனல் வரை சென்று 4வது இடம் பிடித்திருந்தார்.

சமீபத்தில் மில்கா சிங்கின் வீட்டில் வேலை பார்ப்பவருக்கு ‘கொரோனா’ தொற்று உறுதியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை செய்ததில் மில்கா சிங்கிற்கு ‘கொரோனா’ தொற்று உறுதியானதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் இவரது உடலில் ‘ஆக்சிஜன்’ அளவு குறைந்ததால் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதிலிருந்து தேறிய இவர், சமீபத்தில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

நான்கு நாட்களுக்கு பின், மில்கா சிங் உடலில் மீண்டும் ‘ஆக்சிஜன்’ அளவு குறைந்ததால் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரிடம், பிரதமர் மோடி நலம் விசாரித்தார். விரைவில் குணமடைந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி ஊக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *