Share on Social Media


ஐ.நா உறுப்பினர் நாடுகள் இணைந்து இதற்கு சம்மதம் தெரிவித்து ஒப்புதலளித்த பிறகு, அனைத்து நாடுகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உலகத்தில் அனைத்து நாடுகளிலும் உள்ள சட்டங்களில் மிகவும் கடுமையான சட்டம் இந்த NDPS Act-தான். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை.

பொதுவாக, ஒரு நபர் குற்றம் செய்யும் நோக்கத்துடன் அதைச் செய்திருந்தால்தான் அது குற்றமாகக் கருதப்படும். ஒரு நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு அல்லாமல் தற்காப்புக்காக கொலை செய்தார் என்று நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும்.

IRS officer Venkatesh Babu

IRS officer Venkatesh Babu

மேலும், கொலை செய்தவருக்கு அந்த எண்ணம் இருந்தது என்று வழக்கு தொடுப்பவர் (Prosecution) தரப்பிலிருந்து நிரூபிக்க வேண்டும். ஆனால், NDPS சட்டத்தில் விசாரணை அதிகாரியோ, வழக்கு தொடுப்பவரோ சென்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமே இல்லை.

ஒருவரது வீட்டிலோ, அவரது பையிலோ போதைப்பொருள் கண்டறியப்பட்டாலே போதும். அந்த இடத்தில் போதைப்பொருள் எப்படி வந்தது என்பதுகூட அந்த நபருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒருநபர் வசம் போதைப்பொருள் இருந்தால் அது அந்த நபருக்குரியதுதான் என்று சட்டமே அனுமானித்துக்கொள்ளும்.

இதுபோன்ற கடுமையான சட்டங்கள் இல்லை என்றால் போதைப்பொருள் பயன்பாடு, புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம். மேலும், சில இடங்களில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தால் இந்தச் சட்டத்தில் தளர்வு கொண்டு வர வேண்டும் என்பது ஏற்புடைய வாதம் அல்ல. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் நிதர்சனம்” என்கிறார்.

போதைப்பொருள் விவகாரத்தில் மரண தண்டனைகூட வழங்க முடியுமா? எந்த அளவுக்குத் தீவிரமானது NDPS சட்டம்? அந்தத் தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *