ElviftZU0AIl0s4 Tamil News Spot
Share on Social Media

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் கொஞ்சமும் அசராது 30 பந்துகளில் அரைச்சதத்தைக் கடந்த மார்கன் “கேப்டன் இன்னிங்ஸ்னா இப்படி ஆடணும்” என பாடம் நடத்தினார். கம்மின்ஸ், கடைசி ஓவரில் வெளியேற, அடுத்து உள்ளே வந்த நாகர்கோட்டிக்கு கடைசிப் பந்துக்கு முந்தைய இரண்டு பந்துகளில், வாய்ப்புக் கிடைத்தும் ஸ்ட்ரைக் கொடுக்காத மார்கன், கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து, அணியின் ஸ்கோரை 191-க்கு எடுத்துச் சென்றார்.

கடைசி ஆறு ஓவர்களை பவர்ஃபுல் ஓவர்களாக மாற்றிய கொல்கத்தா 70 ரன்களைக் குவித்தது. மூன்று பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனதோ, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளில் விக்கெட் விழுந்ததோ அவர்களை பாதிக்கவே இல்லை. அவர்களின் ரன் குவிப்பை ராஜஸ்தானால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. 186 என்ற இலக்கை கடந்த போட்டியில் எட்டிய ராஜஸ்தான் இந்த ப்ரஷர் கேமிலும் அதை நிகழ்த்துமா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்தது.

இந்த ரன்களை 13.4 ஓவர்களில் முடித்தால் ராஜஸ்தான் ஆர்சிபியை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பது ராஜஸ்தானின் காதுகளில் சத்தமாகச் சொல்லப்பட்டது போலும். வெல்ல வேண்டும் என்பதை விட பெரிய மார்ஜினில் வெல்ல வேண்டும் என்ற அவசரமே ராஜஸ்தானின் பேட்ஸ்மேன்களிடம் காணப்பட்டது. ஸ்டோக்ஸுடன் களம் கண்ட உத்தப்பா முதல் பந்தையே சிக்ஸருக்கு விரட்டினார். கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே முதல் ஐந்து பந்துகளில் 19 ரன்களை இந்தக் கூட்டணி குவிக்க, மலைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதிலேயே ஆறாவது பந்தில் உத்தப்பா ஆட்டமிழக்க, ஸ்மித் உள்ளே வந்தார். பயங்கர ஃபார்மில் இருக்கும் ஸ்டோக்ஸ், கம்மின்ஸ் பந்தில், தினேஷ் கார்த்திக்கின் அபாரமான டைவ் கேட்சினால் ஆட்டமிழக்கச் செய்தது, போட்டியை கேகேஆர் பக்கம் கொண்டு வந்தது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை, பெரிய ஃபார்மில் இருப்பவர் ஸ்டோக்ஸ் மட்டுமே. அவரை ஆட்டமிழக்கச் செய்தது, போட்டியின் கேம் சேஞ்சிங் மொமன்ட்டாக மாறியது.

இரண்டு விக்கெட்டுகளை இழந்து அணி தள்ளாடத் தொடங்கியது. சரி சாம்சன் வந்து விட்டார், சரவெடிதான் இனிமேல் என பார்த்திருந்த கண்களைக் கலங்கச் செய்யுமாறு விழுந்தது, ஸ்மித்தின் விக்கெட். அதுவும் கம்மின்ஸின் பந்திலேயே! என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள்ளேயே, சாம்சனும் ஷிவம் மவியின் பந்தில் ஆட்டமிழக்க, ஹார்ட் அட்டாக் வராதது ஒன்றுதான் குறை, ராஜஸ்தான் ரசிகர்களுக்கு!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *