Share on Social Media


‘மாஸ்டர்’ அறிவிப்பு – ரசிகர்கள், தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி

29 டிச, 2020 – 13:45 IST

எழுத்தின் அளவு:


Master-confirm-releasing-on-Jan-13-:-Fans-happy

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் 2021ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என கடந்த சில வாரங்களாகவே பரபரப்பு நிலவியது. நேற்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இப்படம் ஜனவரி 13 அன்று வெளியாகும் என தயாரிப்பாளர் தங்களிடம் தெரிவித்தாகச் சொன்னார். ஓடிடியில் வெளியிடாமல் தியேட்டர்களில் மட்டுமே படத்தை வெளியிட விஜய் முடிவு செய்ததற்கு திரையரங்க உரிமையாளர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.

அதற்கேற்றபடி பெரும்பாலான தியேட்டர்களில் பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ படத்திற்காகத் தியேட்டர்களைத் தர தியேட்டர்காரர்கள் தயாராக உள்ளனர். இந்நிலையில் படம் ஜனவரி 13 அன்று வெளியாகும் என்று இன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்து ரசிகர்களும், தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கில் ஜனவரி 13ம் தேதியன்றும் ஹிந்தியில் ஜனவரி 14ம் தேதியன்றும் ‘மாஸ்டர்’ வெளியாக உள்ளது. டுவிட்டர் கணக்கு வைத்துள்ள பல தியேட்டர்காரர்கள் அந்த போஸ்டரைப் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஜய்யும் முதல்வரைச் சந்தித்து தியேட்டர்களில் ஜனவரி முதல் 100 சதவீத இருக்கை அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். திரையுலகினரின் வேண்டுகோளை ஏற்று அரசும் அதற்கு சம்மதிக்கும் என்றே தெரிகிறது.

கொரோனா காலத்தில் தியேட்டர்களை மூடியும், ஓடிடி வெளியீடுகளாலும் சிக்கலைச் சந்தித்த தியேட்டர்காரர்கள் இப்போது புத்தாண்டில் புது வழி பிறக்கும் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *