Share on Social Media


புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான திரவ ஆக்சிஜனை வழங்கியதற்காக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அவரது அரசோ கோர்ட்டில் ஆக்சிஜன் வழங்கவில்லை என கூறியுள்ளது.

தலைநகர் டில்லியில் கொரோனா 2-ம் அலையின் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அங்கு தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக ஆக்சிஜன் சப்ளையில் சிக்கல் மற்றும் அதிகரிக்கும் நோயாளிகள் எண்ணிக்கை அம்மாநில தலைப்புச் செய்திகளாக உள்ளன. திங்களன்று 40-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஆக்சிஜன் இருப்பு குறைவதாக அவசரசெய்தி அனுப்பின. புதனன்று டில்லிக்கு தேவையான ஆக்சிஜனை உறுதி செய்வதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேவையான ஆக்சிஜனை விநியோகித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமருக்கு அவர் இன்று எழுதிய கடிதத்தில், “டில்லிக்கு ஒவ்வொரு நாளும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதை ஏற்பாடு செய்ய உதவுமாறு நாங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். நேற்று முதல் முறையாக டில்லிக்கு 730 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்தது. டில்லி மக்கள் சார்பாக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.” என்றார்.

அதே சமயம் டில்லிக்கு ஆக்சிஜன் வழங்குவது தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் டில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, “டில்லி மக்கள் இறந்து கொண்டுள்ளனர். 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து அவமதிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை உங்களால் நீர்த்து போகச் செய்ய முடியாது.” என்றார். அதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஆக்சிஜன் விநியோகத்தில் பிரச்னையில்லை. தவறான நிர்வாகத்தால் தான் பிரச்னை என்றது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *