Share on Social Media


திண்டிவனம்-மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ள, திண்டிவனம் அரசு மருத்துவமனையை போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதிக்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய இடத்தில் போதுமான கட்டட வசதியின்றி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை, கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றம் செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம், மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.கூடுதலாக 300 படுக்கை வசதிகள் கிடைக்கும். இது மட்டுமின்றி பல்வேறு முக்கிய மருத்துவ சிகிச்சை பிரிவுகள் துவங்கவும், கூடுதலாக மருந்து ஒதுக்கீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த அளவிற்கு வசதிகளைக் கொண்டு வருவதற்கு, தற்போதுள்ள அரசு மருத்துவமனையில் போதுமான இடவசதி இல்லை.சமீபத்தில் கூட, இடம் பற்றாக்குறை காரணமாக, மார்ச்சுவரி அமைந்துள்ள இடத்திற்கு அருகே எலும்பு சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டது. மார்ச்சுவரிக்கு அருகிலேயே இக்கட்டடம் இருப்பதால் பெரும்பாலான நோயாளிகள் இரவில் தங்குவதற்கு அச்சப்படுகின்றனர்.அதேபோன்று, தற்போதுள்ள பிரசவ வார்டுக்கான கட்டடத்தை விரிவு படுத்துவதற்கும், அவசர சிகிச்சை பிரிவை விரிவுப்படுத்தவும் இடவசதி இல்லாமல் உள்ளது.இட நெருக்கடி காரணமாக கண் சிகிச்சை பிரிவு, அரசு மருத்துவமனைக்கு எதிரே இடத்தில் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.மருத்துவமனைக்கு வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சுகள் செல்ல வேண்டியிருந்தால், கூட்ட நெரிசல் மிகுந்த மார்க்கெட் வீதியாக கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.அதேபோன்று, போக்குரவரத்து மிகுந்த நகர பகுதியைக் கடந்து மேம்பாலத்தின் வழியாக மெயின்ரோட்டை அடைய குறைந்தது 15 நிமிடம் ஆகிறது. இதனால் நோயாளிகளை தீவிர சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் மற்றும் உயிரிழப்பும் ஏற்படுகிறது.விழுப்புரம், முண்டியம்பாக்கம், ஜிப்பர் உள்ளிட்ட மருத்துவமனைகள் அனைத்தும் மெயின்ரோட்டையொட்டியுள்ள இடத்தில் அமைந்துள்ளது. அதேபோன்று, திண்டிவனத்திலும் மெயின்ரோட்டையொட்டி, போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீணாக பூட்டிக் கிடக்கும்நோயாளிகள் தங்கும் விடுதிதிண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக 1 கோடி ரூபாய் செலவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் சிறப்பு தங்கும் விடுதி கட்டடம் கட்டப்பட்டது.

கடந்த பிப்ரவரி 22ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி, காணொலி மூலம் திறந்து வைத்தார். திறப்பு விழா முடிந்து 8 மாதங்களைக் கடந்த நிலையில், இன்று வரை புதிய கட்டடம் உபயோகமின்றி பூட்டப்பட்டு கிடக்கிறது.இது சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு தெரியுமா என தெரியவில்லை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *