Share on Social Media


கொங்கு மண்டல பிரமுகர் ஒருவர் சமீபத்தில் மேலிடத்து மாப்பிள்ளை வீட்டுக்குச் சீர்வரிசையோடு சென்றாராம். மாப்பிளைக்குக் கொடுத்த சீதனத்துக்குப் பலனாக, கேபிள் துறையில் பெரிய பொறுப்பொன்று அந்தப் பிரமுகருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த ரூட்டை மோப்பம் பிடித்துவிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், இப்போது மாப்பிள்ளையைச் சந்திக்க சீதனத்தோடு வரிசையில் நிற்கிறார்களாம். சீர்வரிசை சரியாக இருந்தால் வாரியம் உறுதி என்று மாப்பிள்ளை தரப்பும் உறுதியளிப்பதால், கட்சி நிர்வாகிகள் சிலர் சீர்வரிசையோடு காத்திருக்கிறார்கள்.

வாரிக்கொடுத்தாதான் வாரியம்னுட்டாங்க!

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் யாரையும் அவர் சந்திக்கவில்லையாம். மாவட்டவாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றபோது, ஆலோசனைக் கூட்டத்தையும் வைத்திலிங்கம் நடத்தவில்லை என்கிறார்கள். சென்னையிலேயே முகாமிட்டிருந்தவர் சமீபத்தில் சொந்த ஊரான ஒரத்தநாட்டுக்குச் சென்று தங்கியிருக்கிறார். இதையறிந்த அவரின் ஆதரவாளர்கள் அவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்கள்.

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

அப்போது வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு, ‘அப்பாவை இப்ப பார்க்க முடியாது. எதுவாக இருந்தாலும் எங்கிட்ட சொல்லுங்க’ என்றிருக்கிறார். ‘மாவட்டச் செயலாளரிடம்தான் பேசுவோம்’ என்று நிர்வாகிகள் சொன்னதும், சந்திக்க அனுமதிக்காமல் திருப்பியனுப்பிவிட்டாராம் பிரபு. இதில் அதிருப்தியடைந்த கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகியோரைச் சந்தித்துப் புலம்பியிருக்கிறார்கள். ‘நிர்வாகிகளை இப்படி புறக்கணித்தால், பலரும் கட்சியைவிட்டு வெளியேறிவிடுவார்கள்’ என்று அவர்கள் கொதிக்கும் விவகாரம்தான் தஞ்சை அ.தி.மு.க-வில் பற்றியெரிகிறது.

வைத்திக்கு வைத்தியம் பாக்கணும்போல!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *