Share on Social Media


இது குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

“2014 ஆகஸ்ட் முதல் 2016 ஜனவரி வரை பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்ட.து. ஆனால், அந்த விலைக் குறைப்பின் பயன், மக்களைச் சென்றடையவில்லை. பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தால் மற்ற பொருள்களின் விலைகள் உயர்வது வாடிக்கை. ஆனால் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தபோது, எந்தப் பொருள்களின் விலைகளும் குறையவில்லை. அதனால், மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைப்பின் பயன்கள் சென்றுசேரவில்லை. பெட்ரேல், டீசல் விலைக் குறைப்பை பெருநிறுவனங்களும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன. அதன் அடிப்பைடையில்தான், பெட்ரோல் டீசல் கலால் வரியை 2016-17-ல் மத்திய அரசு உயர்த்தியது. அதன் மூலமாக, மக்களுக்கான கட்டமைப்புகளைப் பெருக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. 1.76 லட்சம் கி.மீ கிராம சாலைகள் ஐந்து வருடங்களில் அமைக்கப்பட்டன.

பருவநிலை மாற்றத்தின் தாக்குதலால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டினால் ஏற்படும் மாசுவை குறைக்க வேண்டும். இல்லையென்றால், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மீனிதனுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பரீஸ் ஒப்பந்தப்படி, பெட்ரோல் டீசல விலையை உயர்த்தியே வைக்க வேண்டும் என்று 200 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

முந்தைய ஐ.மு கூட்டணி அரசு ரூ.1.37 லட்சம் கோடி அளவுக்கு பங்குகளை (Bonds) எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளன. அதாவது கடன் திருப்பிக்கொடுக்க வேண்டியுள்ளது. இதுவரையிலும் ரூ.5,000 கோடி திருப்பித்தந்துள்ள நிலையில், இந்த ஆண்டு 20,000 கோடியைத் திருப்பித்தர வேண்டும். இன்னும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திருப்பிக்கொடுக்க வேண்டியிருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *