Share on Social Media


புதுடில்லி : “மாநிலங்களுக்கு 95 ஆயிரத்து 82 கோடி ரூபாய் அடுத்த வாரம் வழங்கப்படும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான பொருளாதார மீட்சி குறித்து, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தினார். மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், கவர்னர்கள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின், நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கொரோனா இரண்டாவது அலைக்குப் பின், வலிமையான வளர்ச்சிப் பாதையில் செல்கிறோம். இரட்டை இலக்க வளர்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

முதலீட்டை ஈர்க்கும் விதிமுறைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளை எளிதாக்குவது, மின் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வது ஆகியவற்றால் வரும் ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும். மாநிலங்களுக்கு 95 ஆயிரத்து 82 கோடி ரூபாய் அடுத்த வாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *