Share on Social Media


சென்னை 600028, மங்காத்தா போன்ற வெற்றி படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, சிம்புவை வைத்து இயக்கிய  மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி வாகை சூடியது.  இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார்.  இப்படத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே இந்த படம் சிம்புவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்திருக்கிறது.  

அதிகளவில் இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.  ஆரம்பத்தில் படத்திற்கெதிராக பல பிரச்சனைகள் எழுந்த நிலையில் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு இப்படம் திரையரங்கில் ரிலீசாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. 

இந்நிலையில் இப்படத்தை பற்றி தகவல் ஒன்று கசிந்துள்ளது.  அதாவது வெங்கட் பிரபு இந்த படத்தில் கதாநாயகனாக முதலில் நடிக்க வைக்க எண்ணியது தளபதி விஜய்யை தானாம்.  2016-ம் ஆண்டு இந்த கதையை விஜயிடம் கூறியுள்ளார்.  ஆனால் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்கமுடியவில்லை.  அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் அந்த சமயம் அரவிந்த்சாமி ‘தலைவி’ படத்தில் நடித்து கொண்டிருந்ததால் இப்படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை.  

Vijay

பின்னர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜுனிடமும் பேச்சுவார்த்தை நடப்பட்டது.  அவருக்கும் கால்ஷீட் பிரச்சனை இருந்ததால் பட வாய்ப்பு அவரிடமிருந்து நழுவியது.  அதனையடுத்து படப்பிடிப்பு தொடங்கும் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் படக்குழு எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்தது.

ALSO READ சூர்யாவுடன் நேரடியாக மோதவுள்ள பிரபல நடிகர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link – https://bit.ly/3hDyh4G 

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *