Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • மாநாடு படத்தின் டப்பிங் பணியை கிட்டத்தட்ட முடித்து விட்டதாக எஸ்.ஜே. சூர்யா தகவல்.
  • டப்பிங் பணியால் களைத்துப் போய் விட்டதால் 10 நாட்கள் ஓய்வு தேவை.
  • படத்தின் அவுட்புட்டைப் பார்த்தால் நவம்பர் 25ம் தேதிதான் தீபாவளி என்றும் எஸ்.ஜே. சூர்யா டிவீட்.


மாநாடு படம் தான் இப்போது திரையுலகின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. படத்தின் ரிலீஸ் குறித்து தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது. எஸ். ஜே. சூர்யா முக்கியப் பாத்திரத்தில் வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

தீபாவளிக்கு இப்படத்தை திரையிட முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தீபாவளிக்கு படத்தை திரையிட தியேட்டர்கள் கிடைக்கவில்லை. பெரும்பாலான தியேட்டர்களில் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தை திரையிட புக் செய்து விட்டபடியால், மாநாடு படத்திற்கு போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

இதனால் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் மற்றும் தாயார் உஷா ஆகியோர் கொதித்தெழுந்து விட்டனர். எங்களது மகனுக்கு எதிராக சதி நடப்பதாக இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர். திரைத்துறையில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாகவும் டி.ராஜேந்தர் ஆவேசமாக கூறியிருந்தார். இந்த நிலையில் படம் நவம்பர் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இது சிம்பு ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. விவகாரம் தொடர்ந்து சூடாகவே இருக்கிறது.

இந்த நிலையில் எஸ்.ஜே. சூர்யா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், மாநாடு படத்தில் எனது சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்குக்கு 8 நாட்கள் தேவைப்பட்ட நிலையில் முக்கால்வாசி பகுதியை 5 நாட்களிலேயே முடித்து விட்டேன். நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, முதுகெலும்பு, தொண்டை எல்லாம் போச்சு.. எனக்கு அடுத்த 10 நாட்கள் ஓய்வு தேவைன்னு கெஞ்சி கேட்டுக்கறேன் (ஹெவி ஒர்க், வலி பின்னுது). ஆனால் படத்தோட அவுட்புட்டைப் பார்த்ததுக்குப் பிறகு, ஒன்னு மட்டும் உறுதியா சொல்லிக்கிறேன், தீபாவளி நவம்பர் 25ம் தேதி தாண்டா..” என்று கூறியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

எஸ்.ஜே.சூர்யா போட்டுள்ள இந்த டிவீட் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. ஏற்கனவே படம் வேறு லெவலில் வந்திருப்பதாக ஒரு டாக் உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ள இந்த தகவல் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்துவதாக உள்ளது. இந்த டிவீட்டுக்கு பலத்த கைத்தட்டல் ஒன்றைக் கொடுத்து வரவேற்றுள்ளார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளவரும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியும், சிம்புவின் நண்பருமான பிரேம்ஜி அமரன்.

தீபாவளியன்று வர முடியாவிட்டால் என்ன படம் வரும் நாள்தான் தீபாவளி என்று சிம்பு ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. படம் வரட்டும், அப்புறம் பாத்துக்குறோம் என்று சிம்பு ரசிகர்களும் உற்சாகமாக பதிலளித்து வருகின்றனர்.

அதேசமயம், ரஜினின் அண்ணாத்த படத்துடன் தீபாவளியன்று ஒரு முறை கொண்டாட்டத்தில் ஈடுபடுவதோடு, 25ம் தேதி 2வது தீபாவளியையும் சேர்த்துக் கொண்டாடுவோம் என்று சினிமா ரசிகர்களும் களத்தில் குதித்துள்ளதால் சூர்யாவின் டிவிட்டர் பக்கம் களை கட்டியுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *