Share on Social Media


மதுரை-மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடக்கின்றன.தமுக்கம் மைதானத்தில் ரூ.45.55 கோடியில் கட்டுமானப் பணி, குருவிக்காரன் சாலையில் ரூ.23.17 கோடியில் உயர்மட்ட பாலம், பெரியார் பஸ் ஸ்டாண்டில் ரூ.174.56 கோடியில் மேம்பாட்டு பணி உள்ளிட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆய்வு செய்தார்.

பின்னர் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் 100 வார்டுகளுக்கு குடிநீர் வழங்குதல், சாலை அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல், வரி வசூல் பணிகள், வரைபட மற்றும் கட்டட அனுமதி குறித்து விவாதிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர் சங்கீதா, நகர்ப்பொறியாளர் சுகந்தி, நகர்நல அலுவலர் ராஜா, உதவி கமிஷனர்கள் தட்சிணாமூர்த்தி, அமிர்தலிங்கம், சுரேஷ்குமார், ரங்கராஜன், உதவி செயற்பொறியாளர் சுப்புத்தாய், கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் பங்கேற்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *