Share on Social Media


அம்பத்துார்–பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கிக்காக, மாநகராட்சி கட்டடத்தில் இருந்த, 11 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.அம்பத்துார், ராம் நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சமுதாய கூடம், 21 கடைகள் கொண்ட வணிக வளாகம் உள்ளன.இதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சமுதாயக்கூடத்தில் அம்பத்துார் சார் – பதிவாளர் அலுவலகமும், 11 கடைகளில் நில ஆவண பத்திரம் எழுதும் அலுவலகங்களும் இயங்கி வந்தன.அதற்கான வாடகையை, மாநகராட்சி நிர்வாகம் வசூலித்து வந்தது. அம்பத்துார் காவல் நிலையம் அருகே, சார் – பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு, கடந்தாண்டு திறக்கப்பட்டது. இதையடுத்து, 11 ஆவண எழுத்தர் அலுவலகங்களும் அங்கு மாறின. ஆனாலும், அங்கிருந்தவர்கள், பழைய கடைகளை தங்களது பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், 11 கடைகளுக்கு பல ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை என, கூறப்படுகிறது.இதையடுத்து, நேற்று காலை அம்பத்துார் மண்டல உதவி வருவாய் அலுவலர் லோகநாதன் மற்றும் உரிமம் ஆய்வாளர்கள் முன்னிலையில், மாநகராட்சி ஊழியர்கள், 11 கடைகளுக்கும், ‘சீல்’ வைத்தனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *