Share on Social Media


கோவை:கொரோனா பரவல் தடுப்பு பணியை வேகப்படுத்த, இன்று கோவை வரும் அமைச்சர் நேரு, துறை ரீதியாக, மாநகராட்சியில் உள்ள பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டுமென்கிற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோவை மாவட்டத்தில், மாநகராட்சி பகுதியில்தான் கொரோனா தொற்று பாதிப்பு, 55.70 சதவீதமாக இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தியதால், 5 சதவீதம் மட்டும் குறைந்திருக்கிறது.

மாநகராட்சி பகுதியில் தொற்று தடுப்பு பணியை வேகப்படுத்த, தமிழக நகர்ப்புற மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.இதில், தொற்று பரவல் மட்டுமின்றி, துறை ரீதியான ஆய்வு மற்றும் நிர்வாகப் பிரச்னைகளையும் கேட்டறிந்து, தீர்வு காண வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
அவை, என்னென்ன? மாநகராட்சி நிதி நிலைமையை கேட்டறிந்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு இதுவரை ஒதுக்கிய நிதி; செலவழித்த தொகையை அறிவிக்க வேண்டும். மதிப்பீட்டு தொகையை அதிகமாக குறிப்பிட்டு, முறைகேடாக நிதியை எடுப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால், நிலுவையில் உள்ள பில்களை, மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளுக்கு இதுவரை செலவழித்த தொகை, திட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, வேலை நடந்திருக்கிறதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி நிதிn ‘ஸ்மார்ட் சிட்டி’ உயர்நிலை குழு கூட்டத்தில், ஒப்புதல் பெற்ற திட்டங்கள் என கூறி, அவசியமற்ற பணிகளுக்கு கூட, பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்நிதி இன்னும் செலவிடப்படாமல் இருப்பதால், அத்திட்டங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.n முந்தைய ஆட்சிக்காலத்தில், அதிகாரத்தில் இருந்தவர்களின் நிர்ப்பந்தத்தால், தகுதியில்லாத சிலருக்கு உயர் பதவி வழங்கப்பட்டது. அவர்களது பதவி காலத்தில், என்னென்ன பணிகளுக்கு நிதி செலவிடப்பட்டது; எவ்வளவு தொகை எடுக்கப்பட்டது என்பதை மறுஆய்வுக்கு உட்படுத்தி, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
செல்வாக்கை பயன்படுத்தி, ஓய்வு பெற இருந்த அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இக்கால கட்டத்தில், கையாண்ட நிதி எவ்வளவு, எவ்வளவு தொகை எடுக்கப்பட்டுள்ளது; யார் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை, ஆய்வு செய்ய வேண்டும்.அசைய மாட்டேங்கறாங்க!n ஒரு பணியிடத்துக்கு இரு அதிகாரிகள் அரசாணை வைத்திருக்கின்றனர். உதாரணத்துக்கு, உதவி கமிஷனர் (வருவாய்) பணியிடத்துக்கு சுந்தர்ராஜன், அண்ணாதுரை ஆகியோரும், நகரமைப்பு அலுவலர் பணியிடத்துக்கு சசிப்பிரியா, ரவிச்சந்திரன் ஆகியோரும் அரசாணை வைத்திருக்கின்றனர்.
இப்பதவிகளுக்கு, நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேவைப்பட்டால், சட்டத்திருத்தம் செய்து, மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் வழங்கி, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.மேடைப்பேச்சோடு போச்சு!n ‘கடந்த ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சித்துறை ஊழல் துறையாக மாறி விட்டது’ என, தேர்தல் பரப்புரையின் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
பினாயில் முதல் பிளீச்சிங் பவுடர் வரை அனைத்திலும், முறைகேடு நடந்திருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், ஒவ்வொன்றுக்கும் விலை வித்தியாசத்தை, மேடையிலேயே குறிப்பிட்டுச் சொன்னார். இதுதொடர்பாக, இதுவரை விசாரணை துவக்கப்படவில்லை.n மாநகராட்சி நிர்வாகத்தை ஊழலின்றி, வெளிப்படையானதாக மாற்ற வேண்டும். மக்களுக்கான சேவை உரிய காலத்துக்குள், சென்றடைவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
நீண்டநாள் கோரிக்கை!தமிழக முதல்வரான பின், கோவை வந்த ஸ்டாலினிடம், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோரை நிரந்தரம் செய்வதோடு, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது, அவர்களது நீண்ட நாள் கோரிக்கை. இக்கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, தேர்தலுக்கு முன், நேரடி நியமன முறையில், அவசர அவசரமாக நடந்த துாய்மை பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் நியமன முறைகேடுகளை கண்டறிய வேண்டும்.

AdvertisementThanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *