Share on Social Media


கடலுார் : கடலுார் மாவட்ட பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பபை உறுதி செய்ய வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் கழிவறை சுவர் இடிந்து விழுந்து, 3 மாணவர்கள் இறந்தனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., பூபதி அனுப்பி உள்ள சுற்றறிக்கை:கடலுார் மாவட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், பருவ மழையை தொடர்ந்து பழுதடைந்த கட்டடங்களின் விவரங்கள் பெற்று, தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருந்தும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆய்வு அலுவலர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.பழுதடைந்த மற்றும் இடிக்க வேண்டிய கட்டடங்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது. அந்த கட்டடங்களை சுற்றிலும் நிரந்தர தடுப்புகள் அமைத்து மாணவர்கள் செல்லாமல் கண்காணிக்க வேண்டும்.பாதுகாப்பற்ற கழிவறைகள் அருகே தடுப்புகள் அமைக்க வேண்டும். பள்ளியில் சுற்றுச் சுவர் அருகே இரு புறங்களிலும் 20 அடி துாரம் வரை மாணவர்கள் செல்லாமல் கண்காணிக்க வேண்டும். சுற்றுச்சுவர் அருகே பைக்குகளை நிறுத்தக் கூடாது.பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்க பள்ளங்கள்,

திறந்த வெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் கண்டிப்பாக மூட வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்களை அகற்ற வேண்டும். கட்டட பராமரிப்பு மற்றும் புதிய கட்டட பணிகள் நடக்குமிடங்களுக்கு மாணவர்கள் செல்ல அனுமதிக்க கூடாது.பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளி தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும்.

பள்ளியில் இடிக்க வேண்டிய கட்டடங்கள் இருந்தால் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். தனியார் மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகள், சொந்த பொறுப்பில் பழுதடைந்த கட்டடங்களை அகற்ற வேண்டும். இந்த அறிவுரைகளை பின் பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.