Share on Social Media


ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை சட்டப்பூர்வமாக நிலைபெற செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரி கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும்.
– நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

‘இதெல்லாம் எதற்காக… மாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும்; அதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கட்சிகள் போராடும் காலம் எந்நாளோ…’ என, விரக்தி தெரிவிக்க தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.

‘நீட்’ ரத்து ஆகுமா, ஆகாதா என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., மோடியை சந்திச்சீங்களே, அவரிடம் இதை கேட்டிருக்க வேண்டும். நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் அவரிடம் இருப்பது மறந்து போனதா?
– மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்

‘நீட்’ ரத்து செய்வோம் என கம்யூ., கூட்டணி கட்சிகள் தானே பிரசாரம் செய்தன; இப்போது அந்த பொறுப்பை, பிரதமரிடம் விடுவதா…’ என, கண்டிக்க தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.

ஹிந்து அறநிலையத் துறை என இத்தனை காலமும் அழைக்கப்பட்டு வந்த துறை, குமரி மாவட்டத்தில் சில இடங்களில் வெறும், ‘அறநிலையத் துறை’ என்று மட்டும் குறுகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த மாற்றத்தை அறிவாரா?
– தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்

‘இது, குறுகிய எண்ணம் கொண்ட சிலரின் வேலையாக இருக்கும்…’ எனக் கண்டிக்க துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை.

பொதுவாக பார்லிமென்டில், ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் உறுப்பினர்கள் கோஷமிடுவது வழக்கம். ஆனால், முதல் முறையாக, தமிழில், ‘வேண்டும் வேண்டும்; விவாதம் வேண்டும்’ என ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டதை கவனிக்க முடிந்தது.
– காங்., – எம்.பி., ஜெய்ராம் ரமேஷ்

‘அப்போ இனிமேல், அனைத்து விவாதங்களும் தமிழில் நடத்த குரல் கொடுப்பீர்களா…’ எனக் கேட்க தோன்றும் வகையில், காங்., – எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை.

‘புல்லட் ரயில்’ வேகத்தில், 88 வயதான மெட்ரோ ஸ்ரீதரனை கேரள மாநில முதல்வர் வேட்பாளராக பா.ஜ., அறிவித்தது. ஆனால், அவரை விட, 10 வயது குறைந்த எடியூரப்பாவை, முதல்வர் பதவியிலிருந்து அகற்ற, கட்சியின் சிந்தனையாளர்கள் வரிசையில் வைத்துவிட்டது.
– வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்

‘இதெல்லாம் ஒரு குற்றமா… வெளிநாட்டு கட்சியின் கொள்கையை இங்கு துாக்கி பிடிக்கின்றனர். அவர்களை எல்லாம் கண்டிக்க மாட்டீர்கள்…’ எனக் கூறத் துாண்டும் வகையில், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் அறிக்கை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *