Share on Social Media


இது தொடர்பாகப் பேசியவர், “அடர் வனத்துக்குள் போகும் உணர்வை நாம் நகரிலேயே உணர முடியும். அதற்கு உதவுகின்றன அடர் கவின் காடுகள். இந்த முறையில் வழக்கமான வேம்பு, புங்கன் போன்ற மரங்கள் இல்லாமல் காடுகளில் இருக்கும் பல்வேறு விதமான மரங்களை வளர்க்கலாம். நம்மிடம் இருக்கும் இடவசதிக்கு ஏற்ப அடர் கவின் காடுகளை உருவாக்க முடியும். ஒரு ஏக்கர் நிலமாக இருந்தால் அதனை முற்றிலும் வனமாகவே மாற்ற முடியும். அங்குப் பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்கலாம். ஊர்வன, பறப்பன, சிறு பூச்சி இனங்கள், வண்ணத்துப்பூச்சிகள் எனச் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான உயிர்களுக்கான உறைவிடமாக மாற்றலாம். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நம்மால் ஆன பங்களிப்பைச் செய்ய முடியும். ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி நிர்வாகங்கள் மூலமாகக் காலி இடங்களில் அடர் கவின் காடுகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யலாம். மாணவர்களுக்கும் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

பாலசுப்பிரமணியன்

பாலசுப்பிரமணியன்

காலி இடங்கள், வீட்டு மொட்டை மாடிகள் என எங்கு வேண்டுமானாலும் காடுகளை உருவாக்கலாம். பொதுவாக மொட்டை மாடியில் மரங்கள் வளர்த்தால் வேர், கட்டடத்தைப் பாதிக்கும் என்ற கருத்து இருக்கிறது. ஆனால், வேர் கட்டடத்தில் இறங்காமல் மரங்களை மாடியில் வளர்க்கலாம். அதற்குச் சில தொழில்நுட்பங்கள் இருக்கின்றன” என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *