Share on Social Media


ராம்நகர் : ”ஆதரவு கொடுத்தது போன்று நாடகமாடி கழுத்தை அறுப்பதே காங்கிரசின் வேலை,” என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

ராம்நகரில் அவர் நேற்று கூறியதாவது:தேவகவுடாவை பிரதமராக்கியதே காங்கிரஸ்தான் என கூறுகின்றனர். தேவகவுடா பிரதமர் பதவி கேட்டு, விண்ணப்பத்துடன், காங்கிரசாரை தேடி சென்றாரா.என்னை முதல்வராக்கும்படி, அக்கட்சியிடம் விண்ணப்பத்துடன் சென்றேனா. எங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுத்தது போன்று நடித்து, கழுத்தை அறுப்பதே காங்கிரசின் வேலை. இரண்டு, மூன்று முறை எங்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது.

மேலவை தேர்தலில், ம.ஜ.த., போட்டியிடாத இடங்களில், பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்கும்படி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார். அது அவரது பெருந்தன்மை. அதன்பின் எங்கள் முடிவை வரவேற்று பாராட்டினார்.வரும், 2023 சட்டசபை தேர்தலில் நாங்கள் சுதந்திரமாக போட்டியிட்டு ஆட்சிக்கு வர வேண்டுமென்பது, எங்களின் குறிக்கோள். இதற்காக எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *