Share on Social Media


சண்டிகர்-”கட்சியின் மேலிட தலைவர்கள் என்னை சுத்தமாக மறந்து விட்டனர்,” என, பஞ்சாப் காங்., தலைவராக இருந்த சுனில் ஜாக்கர் ஆவேசமாக கூறியுள்ளார்.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. தீவிர விசுவாசிஅடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டது.இவர்களுடன் கட்சித் தலைமை நடத்திய பல சுற்று பேச்சுகளுக்குப் பின், கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் பதவியேற்றார்.

அந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலத் தலைவராக ஏற்கனவே இருந்த சுனில் ஜாக்கர் பேசியதாவது:கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் என்னை முற்றிலும் மறந்துவிட்டார். கட்சியில் சிலருக்கு ஏதாவது அதிருப்தி இருக்கலாம். அப்போது அவர்களுடன் பேசி, நாங்கள் ஆதரவாக இருப்போம் என, மூத்த தலைவர்கள் உறுதியளிக்க வேண்டும்.

latest tamil news

இந்த பதவியேற்பு விழாவுக்கு பலரையும் அழைத்த ஹரிஷ் ராவத், என்னை முற்றிலுமாக மறந்துவிட்டார். நான் ஒரு தொண்டனாக தற்போது பங்கேற்கிறேன். என்ன நடந்தாலும் நான் கட்சியின் தீவிர விசுவாசியாகவே இருப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.அதிருப்தி லோக்சபா சபாநாயகராக நீண்ட காலம் இருந்த, மறைந்த பல்ராம் ஜாக்கரின் மகன் சுனில் ஜாக்கர், 67. மூன்று முறை பஞ்சாப் எம்.எல்.ஏ.,வாகவும், ஒரு முறை லோக்சபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுனில் ஜாக்கர்.இவரது அதிருப்தி பேச்சால், பஞ்சாப் காங்கிரசில் குழப்பம் நீடிக்கிறது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *