Share on Social Media


புதுச்சேரி:காங். கட்சியில் இருந்து மல்லாடி கிருஷ்ணாராவ் நீக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.வில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக காங். தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் அறிவித்தார்.

ராஜினாமா செய்த லட்சுமிநாராயணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

காங். தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்த அன்றே அவரை காங். கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டோம். அவர் நீக்கப்பட்ட தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது’ என கூறியுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *