Share on Social Media


பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் கடித்தால் அந்த இடத்தை ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அந்த இடத்தை அழுத்தி அல்லது கடித்துத் துப்பி விஷத்தை வெளியேற்றுவது போன்ற தவறான செயல்களைச் செய்யக்கூடாது. கடிபட்ட இடத்துக்கு மேலும் கீழும் ஒரு துணியைக் கட்ட வேண்டும். துணியை அதிக இறுக்கமாகக் கட்டக்கூடாது. குறைந்தபட்சம் 1 செ.மீ இடைவெளி இருக்கும் வகையில் கட்ட வேண்டும். அதிக இறுக்கமாகக் கட்டினால் ரத்த ஓட்டமே பாதிக்கப்பட்டுவிடும். துணியைக் கட்டியபிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும்.

மழைக்காலங்களில் நாள்தோறும் வீட்டு வளாகத்தில் ஏதேனும் விஷ ஜந்துகள் உள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக மழை பெய்து தண்ணீர் வடிந்துவிட்டது என்றால் வளாகம் முழுவதையும் பரிசோதிக்க வேண்டும். வெற்று இடத்தில் மட்டும் பரிசோதிக்காமல் அங்குள்ள பொருள்கள், வாகனங்கள் அருகில், சந்து, இடுக்கு என அனைத்துப் பகுதிகளையும் பரிசோதிக்க வேண்டும்.

ஏதாவது விஷ ஜந்துகள் தங்கியிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவு நீர் வெளியேறும் பாதை வழியாக கழிவறைக்குள் நுழையும் வாய்ப்புள்ளது. பாம்பு அடுக்குமாடி ஏறாது, சுவற்றில் ஏறாது என்பதெல்லாம் தவறு. புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக அதனால் இயங்க முடியும். அவை இருப்பதைக் கண்டறிந்தால் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

மழைக்காலங்களில் கழிவறையை உபயோகிக்கும் முன்பு கழிவறையின் உள்பகுதி, வெளிப்பகுதியையும் நன்றாகப் பரிசோதிக்க வேண்டும். பரிசோதிப்பதற்கு முன்போ, இருட்டில் லைட் போடாமலோ கழிவறையைப் பயன்படுத்தக்கூடாது. சிறு குழந்தைகள், வெளியே விளையாடச் செல்லும் குழந்தைகள் அதிக நேரம் அழுதுகொண்டே இருந்தால் அவர்கள் உடலில் எங்காவது ஏதாவது கடித்தது போன்ற தடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்” என்றார் அவர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *