Share on Social Media

அல்மாட்டி: ஒலிம்பிக் தகுதிச் சுற்று மல்யுத்தப் போட்டிக்கான அரையிறுதியில் சுனில் குமார், குர்பிரீத் சிங் உட்பட 5 இந்திய வீரர்கள் தோல்வியடைந்து ஏமாற்றினர்.

கஜகஸ்தானில், டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான தகுதி சுற்று நடக்கிறது. ஒவ்வொரு எடைப் பிரிவிலும் பைனலுக்கு செல்பவர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெறுவர். ‘கிரிகோ ரோமன்’ 87 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் 7–0 என கிர்கிஸ்தானின் சுக்ரோப் அப்துல்கேவை வீழ்த்திய இந்தியாவின் சுனில் குமார், அரையிறுதியில் 5–9 என, கிர்கிஸ்தானின் நுார்சுல்தான் டர்சினோவிடம் வீழ்ந்தார்.

மற்ற ‘கிரிகோ ரோமன்’ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஞானேந்தர் (60 கி.கி.,), அஷு (67 கி.கி.,), குர்பிரீத் சிங் (77 கி.கி.,), நவீன் (130 கி.கி.,) தோல்வியடைந்தனர். மற்றொரு இந்திய வீரர் ரவி (97 கி.கி.,) காலிறுதியில் தோல்வியடைந்தார். இதன்மூலம் ‘கிரிகோ ரோமன்’ எடைப்பிரிவில் ஒரு இந்திய வீரர் கூட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

‘பிரீஸ்டைல்’ பிரிவில் இதுவரை இந்தியா சார்பில் பஜ்ரங் புனியா (65 கி.கி.,), ரவி தாஹியா (57 கி.கி.,), தீபக் புனியா (86 கி.கி.,), வினேஷ் போகத் (பெண்கள் 53 கி.கி.,) டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *