NTLRG 20201102101001480232 Tamil News Spot
Share on Social Media

மறக்க முடியுமா? – மக்கள் ஆட்சி

02 நவ, 2020 – 10:10 IST

எழுத்தின் அளவு:


Marakkamudiyuma---Makkalaatchi

படம் : மக்கள் ஆட்சி
வெளியான ஆண்டு : 1995
நடிகர்கள் : மம்மூட்டி, ரோஜா, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன்
இயக்கம் : ஆர்.கே.செல்வமணி
தயாரிப்பு : ஆர்த்தி இன்டர்நேஷனல்

அமைதிப்படை படம், அரசியல் நிலையை எடுத்துரைத்தது என்றால், சமகால அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தது, மக்கள் ஆட்சி. செம்பருத்தி படத்திற்கு பின், வெற்றி கிடைக்காமல் போராடிய, ஆர்.கே.செல்வமணிக்கு, மக்கள் ஆட்சி ஆறுதல் அளித்தது. படத்தின் துவக்கத்தில், எம்.ஜி.ஆர்., குரலில், எங்களின் நோக்கம், ஆளை ஒழிப்பதல்ல. மன்னர் ஆட்சியை ஒழித்து, மக்களாட்சியை ஏற்படுத்துவது என்ற வசனம் இடம் பெறும். படத்தின் கதையும் அது தான். படத்தில், அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் சம்பவங்கள் எல்லாம், காட்சிகளாக இடம்பெற்றன.
வேலைவெட்டி ஏதுமில்லாமல் சுற்றும் மம்மூட்டிக்கு, எதிர்பாராதவிதமாக, ஆனந்தராஜின் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கிடைக்கும். அதை பாதுகாப்பதற்காக, ஆர்.சுந்தரராஜன், ரோஜா உடன் இணைந்து, மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினரால், மேடையில் இருக்கும் மம்மூட்டி சுடப்படுவார். அனுதாப அலையால், ம.மு.க., வெற்றி பெறும். முதல்வர் பதவியில், மம்மூட்டி அமர்ந்து, என்ன செய்கிறார் என்பதை, அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டிருப்பார், ஆர்.கே.செல்வமணி.

அப்பாவியாக இருந்து, ஏமாற்றுக்காரராக மாறி, இறுதியில் நல்லவனாக திருந்தி, அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும், சேதுபதி கதாபாத்திரத்தில், மம்மூட்டி அசத்தியிருப்பார். ஆர்.சுந்தரராஜனின் அரசியல் நையாண்டியும், ஆனந்தராஜின் வில்லத்தனமும் ரசிக்க வைத்தன. லிவிங்ஸ்டன் கதாபாத்திரம், யாரை ஒத்திருந்தது என்பதை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். இளையராஜா இசையில், பின்னணி பலமாக இருந்தது.

செம தைரியம், ஆர்.கே.செல்வமணிக்கு!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *