NTLRG 20201025075824478247 Tamil News Spot
Share on Social Media

மறக்க முடியுமா? – நாட்டாமை

25 அக், 2020 – 07:58 IST

எழுத்தின் அளவு:


Marakkamudiyuma---Nattamai

படம் : நாட்டாமை
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : சரத்குமார், விஜயகுமார், குஷ்பு, மீனா, கவுண்டமணி, பொன்னம்பலம்
இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்

‘ஏலே சம்முவம்… எட்றா வண்டிய…’ என்றபடியே, தமிழக குடும்பங்கள், தியேட்டருக்கு படையெடுத்தது, நாட்டாமை படத்திற்கு தான். 1994ல் வெளியான படங்களில், அதிரி புதிரியான ஹிட் அடித்த படம், நாட்டாமை தான்.

‘நீதி டா, நேர்மை டா’ என, பரம்பரையாக வாழ்ந்து வரும் குடும்பத்தின் கதை தான், நாட்டாமை. இதில் குடும்ப சென்டிமென்ட், சண்டை, காமெடி என, சரிவிகிதத்தில் மசாலா கலந்து உருவாக்கியிருந்தார், கே.எஸ்.ரவிக்குமார். சரத்குமார், இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். நாட்டாமையின் மூன்றாம் பங்காளியாக கவுண்டமணியும், செந்திலும் அடித்த கூத்துக்கள், தியேட்டரில் சிரிப்பு அலை எழ செய்தது. வில்லனாக பொன்னம்பலம், மிரட்டியிருந்தார்.

இப்படத்தில், முதலில் மம்முட்டி தான் நடிக்கவிருந்தார். அவர் ஏற்க மறுத்ததால், சரத்குமாருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது. சிறந்த கதைக்கான விருது, ஈரோடு சவுந்தருக்கு கிடைத்தது. விஜயகுமார் கதாபாத்திரத்தில், பாரதிராஜாவை நடிக்க வைக்கலாம் என, படக்குழு நினைத்ததாம். அது, நிறைவேறவில்லை.

சிற்பி இசையில், ‘நாட்டாமை பாதம் பட்டா, கம்பெடுத்து வந்த சிங்கம், கொட்ட பாக்கும், மீனா பொண்ணு, நான் உறவுக்காரன், கோழிகறி குழம்பு…’ பாடல்கள் வெற்றி பெற்றன. இப்படம், தெலுங்கில், பெத்தராயிடு என்ற பெயரில், ‘ரீமேக்’ செய்யப்பட்டது. தமிழில், சரத்குமார் நடித்த வேடத்தில், மோகன்பாபுவும்; விஜயகுமார் நடித்த வேடத்தில், ரஜினியும் நடித்திருந்தனர். பாலிவுட்டில் அனில் கபூர் நடிப்பில் புலந்தியாகவும் ரீமேக் செய்யப்பட்டது.

நீதி சாகாது என்றார், நாட்டாமை!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *