Share on Social Media


மறக்க முடியுமா? – தெனாலி

30 டிச, 2020 – 09:31 IST

எழுத்தின் அளவு:


Marakkamudiyuma---Thenali

படம் : தெனாலி
வெளியான ஆண்டு : 2000
நடிகர்கள் : கமல், ஜெயராம், ஜோதிகா, தேவயானி
இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு : கே.எஸ்.ரவிக்குமார்

திரையுலகில் மாற்றான் தோட்டத்து மல்லிகையை, ரசிப்பது மட்டுமின்றி, அதை தமிழுக்கு ஏற்ப மாற்றிக் கொடுப்பதிலும் வல்லவர், கமல். வாட் எபவுட் பாப் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை தழுவி உருவானது தான், தெனாலி. பல புதிய காட்சிகள், இதில் இணைக்கப்பட்டன. இப்படத்திற்கு தலைப்பு கொடுத்தவர், ரஜினி. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியிருந்தார்.

எதைக் கண்டாலும் பயந்து பதறும், தெனாலி சோமனாக, கமல். அவரை சரி செய்யும் மருத்துவர் கைலாஷாக, ஜெயராம். இவரின் தங்கை ஜோதிகாவும், கமலும் காதலிக்கின்றனர். அதை தடுக்க, ஜெயராம் என்னென்ன செய்கிறார் என்பதை, காமெடியாக சொல்லி இருந்தனர். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில், படத்தை இயக்கியிருந்தார், கே.எஸ்.ரவிக்குமார்.

இப்படத்தில் கமல், இலங்கைத் தமிழ் பேசும் நபராக நடித்திருந்தார். அதனால், பிரபல வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளர் அப்துல் ஹமீத், இப்படத்தின் வசனத்திற்கு துணைபுரிந்தார். இப்படத்தில் தான், ‘உலக நாயகன்’ என்ற பட்டம், கமலுக்கு வழங்கப்பட்டது.

இப்படம், தெலுங்கில் தெனாலி எனும் பெயரிலேயே வெளியானது. தெலுங்கில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்படத்தின் உரிமையை வாங்கி வெளியிட்டார். கைலாஷாக நடிக்க, ஆரம்பத்தில் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார். ஜானகி கதாபாத்திரத்தில், சிம்ரன் நடிப்பதாக இருந்தது. பின், அந்த கதாபாத்திரங்களில் ஜெயராம் மற்றும் ஜோதிகா நடித்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘அத்தினி சித்தினி, சுவாசமே சுவாசமே, இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ, போர்கலம் அங்கே, ஆலங்கட்டி மழை, தெனாலி…’ பாடல்கள் ரசிக்க செய்தன.

சிரிக்க சிரிக்க கதை சொன்னான், தெனாலி!





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *