Share on Social Media


மதுரை: தமிழ்நாடு செவிலியர் சங்க பொருளாளர் ஆரோக்கியம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை முனிச்சாலை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றுகிறேன். கொரோனா பேரிடர் காலம் என்பதால் நான் மேலூர் கொரோனா மையத்திற்கு மாற்றப்பட்டேன். கொரோனா கால பணியின்போது உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை. எனவே, கொரோனா கால பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்துவித மருத்துவ பணியாளர்களுக்கும் உணவு மற்றும் தங்குமிட வசதியை ஏற்படுத்தி தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜெ.நிஷாபானு நேற்று விசாரித்தார். இதே போன்ற வழக்குகள் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை அந்த அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *