IMG 20201006 WA0056 Tamil News Spot
Share on Social Media

மருத்துவர்கள் வராததால் கிராமப்புற கர்ப்பிணிப் பெண்களுக்கு செவிலியர்களே பிரசவம் பார்க்கிறார்கள். அதனால் தாய், சேய் உயிருக்கு உத்ரவாதம் இல்லாத நிலை உருவாகிறது. குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்போது உடனே அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுவதற்கு ஆபரேஷன் தியேட்டரும் இல்லை. மருத்துவர்களும் இருப்பதில்லை.

அவர்களை சேலம், மேட்டூர் மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், அங்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் இல்லாத அவலநிலை உள்ளது. இதுதவிர இந்த 5 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்கு வந்தால் மருத்துவமனையில் மதிய உணவு வழங்க வேண்டும். ஆனால், உணவு வழங்குவதில்லை. இப்படி பல பிரச்னைகள் முதல்வர் தொகுதியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ளன’’ என்றார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதுபற்றி நங்கவள்ளி வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபனிடம் கேட்டதற்கு, “எங்க வட்டார மருத்துவமனைகளில் 16 மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதில் ஏரியாவிற்கு செல்லக் கூடியவர்கள், சித்த மருத்துவர்கள், டியூட்டி மருத்துவர்கள், தற்போது கோவிட் 19 சிகிச்சை கொடுக்கச் செல்லும் மருத்துவர்களும் அடங்குவர். இதில் டியூட்டி மருத்துவர்கள் எப்போதும் டியூட்டியில் இருக்கிறார்கள். ஆப்ரேஷன் தியேட்டர் இருக்கிறது. முடியாதபட்சத்தில் மட்டுமே மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். மேச்சேரி, ஜலகண்டாபுரத்தில் ஆம்புலன்ஸ் வசதி இருக்கிறது. அழைத்தால் பத்து நிமிடத்தில் வந்துவிடும்’’ என்றார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *