Share on Social Media

கடன்களை அடைப்பதற்காக அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை விற்க சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாதவ் தீர் (Director at Lords Chloro Alkali Ltd), எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் எம்.கே.ராஜகோபால் மற்றும் கோட்டக் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் (Kotak Special Situations) ஆகிய நிறுவனங்கள் லீ மெரிடியன் ஹோட்டலை வாங்க முன்வந்தன.

இந்த மூன்று நிறுவனங்கள் சமர்பித்த ஆவணங்கள் அடிப்படையில், சென்னையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே. ராஜகோபாலன் சமர்ப்பித்த ரூ.423 கோடி மதிப்புள்ள கையகப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், லீ மெரிடியன் ஹோட்டல்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,600 கோடி என்கிற நிலையில், மிகவும் குறைந்த ஏலத்திற்கு விற்பது நியாயமில்லை என்கிற கருத்தை முன்வைத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

சென்னை லீ மெரிடியன்

சென்னை லீ மெரிடியன்

ரஜினி நடித்திருக்கும் `கபாலி’ திரைப்படத்தின் காட்சிகளில், லீ மெரிடியன் ஹோட்டலில் தங்குவது போல காட்சியமைப்பு இருக்கும்.

பல்வேறு திரைப்படங்களில் இந்த லீ மெரிடியன் ஹோட்டல் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. திரைப்படத்தில் மட்டுமல்லாமல், சினிமா பிரபலங்கள் முதல் வாஜ்பாய் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வரை பலரும் இந்த லீ மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். இந்த ஹோட்டலை கையகப்படுத்திய பிறகு, அதை மருத்துவமனையாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும், கோவையிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டலை சீரமைத்து நட்சத்திர ஹோட்டலாகவே தொடர்ந்து நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் எம்.ஜி.எம் குழுமம் தெரிவித்துள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *