Share on Social Media


புதுடில்லி: ”நீண்ட காலம் ஆட்சி யில் இருந்தும், மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை,” என, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பூபேந்தர் யாதவ் கூறியதாவது:
மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீடு அறிவித்து உள்ளார். இது சமூக மற்றும் பொருளாதார ரீதியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட, வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை; இதற்காக பிரதமரை பாராட்டுகிறேன்.
நீண்ட காலம் ஆட்சியில் இருந்த போதிலும் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து பேசினாலும், தங்களின் குடும்பங்கள் மற்றும் சொந்த நலனில் மட்டுமே அக்கறை செலுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *