Share on Social Media


பிரசாந்த் கிஷோரும் சில காலம் முன்பு, “`பிரதமர் மோடி, பா.ஜ.க-வின் பலம் குறித்து ராகுல் உணரவேயில்லை. இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பா.ஜ.க சக்திவாய்ந்ததாக இருக்கும்” என்று தன் பங்குக்கு காங்கிரஸைத் தாக்கினார். மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தால், `காங்கிரஸை பலவீனமாக்கி, நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக திரிணாமுல் காங்கிரஸை நிலை நிறுத்த வேண்டும்’ என்பதே மம்தாவின் திட்டமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

பலன் யாருக்கு?

திரிணாமுல் காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் மோதிக் கொள்வதால் பலன் யாருக்கு என்பது குறித்துப் பேசும் அரசியல் நோக்கர்கள், “2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால்கூட, தன்னையே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென மம்தா திட்டமிடுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாகக்கூட காங்கிரஸுக்கும், மம்தாவுக்குமிடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம். இந்த மோதல் காரணமாக பல மாநிலங்களிலும் வலுவிழந்துவரும் காங்கிரஸ், மேலும் வலுவிழக்கும் நிலைமையே ஏற்படும். மம்தா, காங்கிரஸ் என இருதரப்பும் பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கோடுதான் செயல்பட்டுவருகின்றன. அப்படியிருக்கையில், இந்தியா முழுவதும் கட்சி கட்டமைப்பு கொண்டிருக்கும் காங்கிரஸை, மம்தா பகைத்துக் கொள்வது சரியல்ல. காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகளுக்கிடையே நடக்கும் இந்த மோதல்கள் பா.ஜ.க-வுக்குத்தான் பலன் தரும்” என்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *